செய்திகள்

ஜெர்மன்விங்ஸ் விமானம் வேண்டுமென்றே சகவிமானியால் வீழ்த்தப்பட்டது

பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் சகவிமானி ” வேண்டுமென்றே விமானத்தை அழிக்க” விரும்பியதாக பிரெஞ்சுப் புலனாய்வாளர்கள் கூறியிருக்கின்றனர். விமானி அறையில் இருந்த ஒலிப்பதிவுக் கருவியில் இருந்து கிடைத்த தகவல்களை ஆராய்ந்த பிரெஞ்சு புலனாய்வாளர்கள் விமானத்தின் சக விமானி விமானத்தைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்து வேண்டுமென்றே விமானத்தைக் கீழ் நோக்கிக் கொண்டு சென்றதாகக் கூறினர்.

_81925461_81925460

விமானிகள் அறையில் இருந்து அப்போதுதான் வெளியே சென்ற தலைமை விமானி மீண்டும் உள்ளே வர முடியாத நிலையில் விமானி அறை உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்ததாம்.

கதவை திறக்குமாறும் தனக்கு அனுமதி அளிக்குமாறும்  பல தடவைகள் சக விமானி கோரிக்கை விடுத்தபோதிலும் இறுதிவரை கதவு திறக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அன்றியாஸ் கண்டர் லுபிட்ஸ் என்ற 28 வயதுடைய இந்த விமானி மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் இதன் காரணமாக இவர் பயிற்சியின் போது கட்டாயமாக பல மாதங்கள் ஓய்வில் இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் பின்னர் ஒய்வின் பின்னர் 100% அவர் தேறியிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இவரது ஒரே நோக்கம் விமானத்தை மலையில் மோதி சிதறடிப்பதாகவே இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

சகவிமானி விமானம் இறுதியாக மலையில் மோதி நொறுங்கும் வரை உயிருடன் இருந்ததாகவும் புலனாய்வாளர்கள் கூறியிருக்கின்றனர். ஸ்பெயினின் பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனியின் டுசல்டார்ஃப் நகருக்கு சென்று கொண்டிருந்த இந்த ஏர்பஸ் 320 விமானம் செவ்வாய்க்கிழமை மலையில் மோதி நொறுங்கியது. இதில் பயணித்த அனைத்து 150 பயணிகளும் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 14 பள்ளிச் சிறார்களும் அடங்குவர்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=fuCZLPvOn_c” width=”500″ height=”300″]

1 2 3