செய்திகள்

ஜேமனிலிருந்து 58 இலங்கையர் இன்று நாடு திரும்புவர்

ஜேமனில் தங்கியுள்ள 58 இலங்கையர்கள் இன்றைய தினம் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
சீன நாட்டு விமானம் மூலம் இவர்களை பகரேனுக்கு அழைத்து வந்து அங்கிருந்து மிஹின் லங்கா விமாத்தின் மூலம் இன்று இரவு இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
ஜேமனில் 75 முதல் 100 பேர் வரையான இலங்கையர்கள் பணியாற்றலாம் என தெரிவிக்கப்படும் நிலையில் இவர்களில் பலர் பணியகத்தில் பதிவு செய்யாது சென்றுள்ளமையினால் அவர்கள் தொடர்பாக சரியான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாகவும் எவ்வாறாயினும் இது தொடர்பாக விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
ஜேமனில் கடந்த சில வாரங்களாக மோதல் நிலைமை உக்கிரமடைந்துள்ள நிலையிலேயே அங்குள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்து என்பது குறிப்பிடத்தக்கது.