செய்திகள்

ஜேர்மன்விங்ஸ் விமானத்தை வேண்டுமென்று மோதிய விமானியின் உடல்நிலை குறித்து திடுக்கிடும் தகவல்கள்.

ஜேர்மன்விங்ஸின் விமானத்தை வேண்டுமென்றே மலையில் மோதியதாக கருதப்படும் விமானவோட்டி,ஓரு நாள் உலகில் உள்ள அனைவருக்கும் எனது பெயர் தெரியவரும் என முன்னர் தெரிவித்திருந்ததாக அவரது முன்னால் காதலி தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியின் செய்தித்தாளொன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் ஆன்டிரியஸ்லூபிட்ஸ் அவ்வாறு தெரிவித்ததாக அவரது முன்னாள் காதலி குறிப்பிட்டுள்ளார்.
ஓரு நாள் நான் செய்யப்போகும் செயல் காரணமாக முழு அமைப்பும் மாறும்,அதன் பின்னர் அனைவரும் எனது பெயரை நினைவில் வைத்திருப்பர் என அவர் குறிப்பிட்டதாக விமானபணிப்பெண்ணாக பணிபுரியும் அவர் தெரிவித்துள்ளார்.
தான் லூபிட்ஸ் குறித்த செய்தியை அறிந்ததும் அதிர்ச்சியடைந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தனது உடல்நிலை காரணமாக தான் உயர்பதவிகளை வகிக்க முடியாது, நீண்டகாலமாக விமானவோட்டியாக பணியாற்ற முடியாது என்பதை உணர்ந்த காரணத்திலேயே லூபிட்ஸ் விமானத்தை மலையுடன் மோதியிருக்கலாம் எனவும் அவரது முன்னாள் காதலி தெரிவித்துள்ளார்.
அவரது உடல்நிலை காரணமாகவே தான் அவரிடமிருந்து பிரிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் உறக்கத்தில் பயங்கர கனவுகளால் பாதிக்கப்பட்டார், விமானம்வீழ்கின்றது என அலறியபடி பல முறை உறக்கத்திலிருந்து எழுந்துள்ளார்.
அவர்தனது வேலை குறித்து கடும் அழுத்தத்துடன் காணப்பட்டார்.

இதேவேளை குறிப்பிட்ட விமானவோட்டி மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்றுவந்ததாகவும் புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக ஜேர்மன் பத்திரிகை தெரிவித்துள்ளது.
அவரது வீட்டிலிருந்து பல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன, அவையாவும் மனோநிலை பாதிப்பை சரிசெய்ய பயன்படுத்தப்படுபவை என அந்தபத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
அவர் தனது உடல்நிலை குறித்த உண்மைகளை மறைத்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவரின் கண்பார்வையில் பிரச்சினையிருந்ததாக நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்டவிமானியின் ஆளுமை குறைபாடுகளே இந்த விபத்திற்கு முக்கிய காரணம் என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் அதேவேளை அது மாத்திரம் காரணம் என உடனடியாக கருதமுடியாது என குறிப்பிட்டுள்ளனர்.