செய்திகள்

ஜேவிபி ஒரு கம்பனி அதன் அதிகார பிரச்சினையே சோமவன்ச விலக காரணம்

சோமவன்ச அமரசிங்க கட்சியிலிருந்து விலகியமையானது ஜே.வி.பிக்குள் நீண்டகாலமாகக் காணப்படும் அதிகாரப் பிரச்சினையின் வெளிப்பாடே என ஜே.வி.பியின் முன்னாள் உறுப்பினர் நந்தன குணதிலக தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக கட்சிக்குள் காணப்படும் இந்தப் பிரச்சினையை அவர்களால் தீர்க்க முடியாதுள்ளது என்பதை எடுத்துக்காட்டியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஜே.வி.பி ஒரு கம்பனிபோன்று ஆகி விட்டதாகவும், அரசியலுடன் தொடர்புடைய சில வர்த்தகர்களுடன் ஜே.வி.பியின் தலைமைத்துவம் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டிருப்பதாகவும் நந்தன குணதிலக குற்றஞ்சாட்டியுள்ளார்.