செய்திகள்

ஜே.வி.பிக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுப்பேன் : கோத்தாபய

ஜே.வி.பிக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்ப போவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர்  கோதாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
2013ம் ஆண்டு அம்பாறையில் நடைபெற்ற ‘தயட்ட கிருள’ கண்காட்சியின் போது ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அதனுடன்  கோதாபயவும் தொடர்பு பட்டுள்ளதாகவும் தெரிவித்து ஜே.வி.பியினரால் நேற்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தன் மீது  பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து தனக்கு அவப்பெயரை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் இதனால் ஜே.வி.பியினருக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.