செய்திகள்

ஜோசப் ஸ்டாலினுக்கு விளக்க மறியல்!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்ட அவர் நேற்றைய தினம் மாலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது இவரை விளக்க மறியலில் வைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் நேற்று பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-(3)