செய்திகள்

ஜோன் அமரதுங்க மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை: பாராளுமன்றத்தில் சமர்பிப்பு

சட்டம்- ஒழுங்குக்குப் பொறுப்பான புதிய அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களில் 114 உறுப்பினர்களின் கையொப்பம் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கிடைத்துள்ளதாக எதிரணியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜோன் செனவிரட்ன தெரிவித்தார்.

வத்தளை பிரதேசசபை தலைவர் மீது அண்மையில் நடந்த தாக்குதலுடன் பொதுமக்கள் பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு தொடர்பு இருப்பதாக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

அவ்வாறே, ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் எதிர்க்கட்சியினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுப்பதற்கு புதிய அமைச்சர் தவறிவிட்டதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.