செய்திகள்

ஜோன் அமரதூங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

அமைச்சர் ஜோன் அமரதூங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டு வரவுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தான் பாராளுமன்றத்தில் நேற்று வினவிய கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் பிழையான தகவல்களை வழங்கியுள்ளதன் மூலம், பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளதாக, மஹிந்தானந்த அளுத்கமகே இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

n10