செய்திகள்

ஜோன் கெரியின் பயணம் முடியும் வரை பாராளுமன்றம் கலைக்கப்படாது

அடுத்த மாதம் முதல் வாரத்தில் அமெரிக்க இராஜாங்கச் செயலர்; ஜோன் கெரி இலங்கைக்கு விஜயம் செய்வார்; என்று எதிர்பார்க்கும் நிலையில் ஜோன் கெரியின் பயணம் நிறைவடையும் வரை, நாடாளுமன்றம் கலைக்கப்படாது என்று, பிரதி நீதி அமைச்சர் சுஜீன செனசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற கட்டடத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

”19வது திருத்தச்சட்டத்தை அடுத்தவாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றத் தவறினால், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும்.

அதேவேளை, மிக விரைவில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, தனது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் வரை பாராளுமன்றம் கலைக்கப்படாது.

ஒரு வெளிநாட்டு அரச பிரமுகர் நாட்டுக்கு வரும் போது, அவருக்கு வாழ்த்துக் கூறுவது பாராளுமன்றப் பாரம்பரியம். கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீளவும் கூட்ட முடியாது என்பதால், அமெரிக்க இராஜாங்கச் செயலரின் பயணம் முடிந்த பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்தார்.