செய்திகள்

ஜோன் கெரி இலங்கையை வந்தடைந்தார்

அமெரிக்க இராஜங்க செயலாளர் ஜோன் கெரி இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளார்.
அமெரிக்காவுக்கு சொந்தமான போயிங் 757 என்ற விமானத்தின் மூலம் இன்று காலை 8 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவருடன் 35பேர் அடங்கிய குழுவொன்றும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜோன் கெரி விமான நிலையத்தில் வைத்து இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவினால் வரவேற்கப்பட்டுள்ளார்.
இவரின் வருகையையொட்டி கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.