செய்திகள்

ஜோன் கெரி ஜூனில் இலங்கை விஜயம்

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி,  ஜுன்  மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஒருவர் இலங்கைக்கு இறுதியாக 1982 ஆம் ஆண்டே வருகைதந்திருந்தார்.

புதிதாக தெரிவாகியுள்ள  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா எதிர்பார்ப்பதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.