செய்திகள்

ஜோன் கெரி நாடு திரும்பினார்

இலங்கையின் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு அமெரிக்க இராஜாங்க செயலாளர் இன்று முற்பகல் நாடு திரும்பினர்.

இன்று முற்பகல் 11.45 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக அமெரிக்கா நோக்கி பயணமாகியுள்ளார்.

நேற்று காலை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் ஜனாதிபதி , பிரதமர் மற்றும் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.