செய்திகள்

ஜோர்தான் விமானதாக்குதலில் அமெரிக்க பணயக்கைதி பலி என்கிறது ஐஎஸ்ஐஎஸ்

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் தாங்கள் பணயக்கைதியாக பிடித்து வைத்திருந்த கையிலா மியுலர் எனப்படும் அமெரிக்க யுவதி; ஜோர்தானின் விமானத்தாக்குதலில் பலியாகிவிட்டதாக தெரிவித்துள்ள அதேவேளை அவர் உயிருடன் இருப்பார் என அவரது பெற்றோர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஜோர்தானின் விமான குண்டுவீச்சினால் தரைமட்டடான கட்டிடமொன்றின் படங்களை வெளியிட்டுள்ள ஐஎஸ்ஐஎஸ் குறிப்பிட்ட கட்டிடத்திற்குள்ளிருந்த அமெரிக்க பணயக்கைதி கொல்லப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளது.
எனினும் கையிலா மியுலரின் பெற்றோர் அவர் உயிருடன் உள்ளார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
அவரை ஓரு விருந்தாளியாக நடத்துமாறு அந்த அமைப்பிற்கு வேண்டுகோள் விடுத்துள்ள பெற்றோர் தங்களை தொடர்புகொள்ளுமாறும் குறிப்பிட்ட அமைப்பினரை கேட்டுள்ளனர்.
எனினும் ஜோர்தான் இது பிரச்சார நடவடிக்கை என தெரிவி;த்துள்ளது.
26 வயதான மியுலர் 2012 முதல் சிரியா-துருக்கி எல்லையில் அகதிகளுக்காக பணியாற்றி வந்தார்,2013 இல் இவர் சிரியாவின் அலெப்பே நகரில் வைத்து கடத்தப்பட்டார்.
இதுவரை மூன்று அமெரிக்கர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினால் கொல்லப்பட்டு;ள்ள நிலையிலேயே இவரது மரணம் குறித்து செய்தி வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் பேச்சாளர் இந்த தகவல் குறித்து கரிசனை வெளியிட்டுள்ளார்.