செய்திகள்

ஞானசார தேரரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர்; கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்வதற்காக கொழும்பு பிரதான நீதவான் ஹிகான் பிலப்பிட்டியவினால் பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முன்னால் கடந்த 23ம் திகதி நீதி மன்ற தடையுத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை இ;ன்று நீதி மன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் ஞானசார தேரர் இன்று ஆஜராகாத காரணத்தினாலே அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.