செய்திகள்

ஞானசார தேரர் விரைவில் கைது

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றில் ஆஜராகத் தவறியமைக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய இந்த உத்தரவினை பிறப்பித் துள்ளார். அண்மையில் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவுக்கு முன்னால் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பில் நீதிமன்றில் முன்னிலை யாகுமாறு ஞானசார தேரருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

எனினும் வெள்ளியன்று ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை. இதனைத் தொடர்ந்து அவரைக் கைது செய்யுமாறு நீதவான் பிலபிட்டிய உத்தரவிட் டுள்ளார்.