செய்திகள்

ஞாயிறன்று லீ குவானின் இறுதி நிகழ்வு: உலக தலைவர்கள் பலர் கலந்து கொள்வர்

சிங்கப்பூரின் ஸ்தாபக தந்தையும் முன்னாள் பிரதமருமான லீ குவான் ஜியூவின் இறுதி நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் அந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள உள்ள அதேவேளை சீன பிரதமர் கி ஜின்பிங்கும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளைய தினம் முதல் எதிர்வரும் சனிக்கிழமை முதல் லீயின் உடல் பாராளுமன்றத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் தமது இறுதி வணக்கத்தை செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதேவேளை இறுதிநிகழ்வுகள் சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகத்தில் ஞாயிறு அன்று நடைபெறும்.

2 3 4 5 6 8