செய்திகள்

ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நியுசிலாந்து அணி சாதிக்கும்: ஸ்டிபன் பிளெமிங்

தென்னாபிரிக்காவுடனான வெற்றியின் பின்னர் இது நிஜமா அல்லது கனவா என என்னை நானே கிள்ளிப்பார்த்துக்கொண்டேன். ஊடகங்கள் இந்த வெற்றிக்கு அளித்துள்ள முக்கியத்துவம் நான் காண்பது கனவல்ல என்பதை உணர்த்தியுள்ளது. இதே உணர்வே நியுசிலாந்து முழுவதிலும் காணப்படுகின்றது.  கனவா நிஜமா என அவர்கள் திகைத்துப்போயுள்ளனர். எங்கும் உற்சாகமும் மகிழ்ச்சியும் காணப்படுகின்றது.

இரண்டு தடவைகள் உலககிண்ணத்தில் மறக்க முடியாத தோல்வியை சந்தித்தவன் என்ற வகையில் மக்கலமும் அணியும் விளையாடும் விதம் நிச்சயமாக மனதிற்கு மகிழ்ச்சிதருவதாக காணப்படுகின்றது. தென்னாபிரிக்காவுடனான போட்டியில் அவர்கள் வெற்றிபெறுவார்கள் என்ற நம்பிக்கை அந்த ஓரு பந்துவரை என்னிடமிருக்கவில்லை. மிகவும் பரபரப்பான போட்டியது.

நியுசிலாந்து அணி பந்து வீசிய வேளை தென்னாபிரிக்கா ஓட்டம் பெறத்தவறிய ஓவ்வொரு பந்திற்கும் இரசிகர்கள் பலத்த வரவேற்பையளித்தனர். இப்படியொரு ஒரு நாள் போட்டியை நான் இதற்கு முன்னர் பார்த்ததாக எனக்கு நினைவில்லை. ஓவ்வொரு பந்தும் ஓரு பாரிய விடயமாக காணப்பட்டது.

இரு சமபலம் பொருந்திய மிகத்திறமையான அணிகளுக்கு மத்தியில் இடம்பெற்ற மோதலிது. போட்டியின் எந்த கட்டத்திலும் ஓரு அணி மற்றைய அணியை விட பலமான நிலையிலிருந்ததாக நான் கருதவில்லை.
நான் பிரென்டன் மக்கலத்தின் அந்த இனிங்சிற்காக தலைவணங்குகின்றேன். அந்த இனிங்சே போட்டியை நியுசிலாந்திற்கு சாதகமான விதத்தில் மாற்றியது.

209381நான் இந்த போட்டிக்கு முன்னதாக கருத்துதெரிவிக்கையில் அதனையே குறிப்பிட்டிருந்தேன். மக்கலம் தான் துடுப்பெடுத்தாடும்போது எதிரணியை பலவீனப்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும், இலகுவாக ஆட்டமிழக்க கூடாது என குறிப்பிட்டிருந்தேன்.அவர் அவ்வாறே விளையாடினார்.

முதல் ஏழு ஓவர்களில் அடித்து நொருக்கிய பின்னர் உடனடியாக ஆட்டமிழந்ததன் மூலமாக அவர் தென்னாபிரிக்காவிற்கு ஓரு சாதகத்தன்மையை வழங்கினார் என நீங்கள் கருதலாம். ஆனால் நான் இதனை வேறு விதமாக பார்க்கிறேன்.

மக்கலத்தின் இனிங்ஸ் ஆரம்பத்திலேயே தென்னாபிரிக்காவின் நம்பிக்கையை சிதைத்தது குறிப்பாக ஸ்டெயின் மூலமாக உருவாக கூடிய ஆபத்தை நீக்கியது என நான் கருதுகிறேன். அவ்வளவு வேகமான ஆரம்பத்தையளித்ததன் காரணமாக நியுசிலாந்து அணியின் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் ஓரு ஓவரிற்கு ஏழு ஓட்டங்களுக்கு பெறவேண்டிய தேவையிருக்கவில்லை.

நாணய சுழற்சி மிகமுக்கியமானதாக அமைந்தது. தென்னாபிரிக்க அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. நானும் துடுப்பாடவே தீர்மானித்திருப்பேன் என மக்கலம் தெரிவித்தது இன்னும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மழை குறுக்கிட்டது தென்னாபிரிக்காவிற்கு பாதகமாக அமைந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மழை குறுக்கிடாவிட்டால் அவர்கள் 400 ஓட்டங்கள் வரை பெற்றிருப்பார்கள். அது நியுசிலாந்திற்கு கடும் சவாலையளித்திருக்கும்.

கிரான்ட் எலியட்டின் துடுப்பாட்டம் அவரை தெரிவுசெய்தது எவ்வளவு சிறப்பான விடயம் என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.டிசம்பரில் பாக்கிஸ்தானுடனான போட்டிகளில் அவர் அணியில்இடம்பெறவில்லை. தற்போது அணிக்காக தெரிவுசெய்யப்படும் முதல் வீரர் அவராகவே காணப்படுகின்றார்.

during the 2015 Cricket World Cup Semi Final match between New Zealand and South Africa at Eden Park on March 24, 2015 in Auckland, New Zealand.அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு புத்துயுர் அளித்தமைக்காக தேர்வுக்குழுவினரை பாராட்டவேண்டும். இறுதி ஓவர்களில் அவரது பொறுமையும், நிதானமும் மிகவும் அவசியமான தேவையாக காணப்பட்டன. அவர் நிதானமிழக்காதவராக காணப்பட்டார், ஸ்டெயினின் பந்து வீச்சில் அவர் பெற்ற அந்த சிக்ஸர் அவரது இனிங்சின் மிகவும் இனிப்பான விடயம். அதேவேளை தென்னாபிரிக்கா குறித்து கவலையடையாமலிருக்க முடியவில்லை.

மோர்க்ல் உலகமே பார்த்திருக்க கண்ணீர் விட்டழுதது, கிரிக்கெட் உலகின் மனதில் என்றென்றும் நிலைத்திருக்க போகின்ற விடயம்.

இதைவிட முக்கியமான விடயம் இரு அணிகளும் எப்படி மைதானத்தில் கௌரவமாக நடந்துகொண்டன என்பது. அவர்கள் விளையாடிய விதம், ஒருவரை ஓருவர் மதித்த விதம், அற்புதமானது. நவீன கிரிக்கெட் உலகம் குறித்து எனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ள விடயமிது.

இறுதியாட்டத்தில நியுசிலாந்து அணி எந்த அணியை எதிர்கொண்டாலும் அது கடினமான சவாலகவே விளங்கப்போகின்றது. நியுசிலாந்து அணி இதுவரை விளையாடிய விதத்தை பார்க்கும்போது ஞாயிற்றுக்கிழமை அவர்களால் மீண்டும் சாதிக்க முடியும் என்றே கருதுகிறேன்.