செய்திகள்

ஞாயிற்றுக்கிழமை லண்டன் பூங்காவுக்கு வந்த 3 ஆயிரம் பேர் – இழுத்து மூடினர் பொலிஸார்

இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சமூக விலகலை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியும், அதனை பொருட்படுத்தாமல் சுமார் 3000 ஒன்றுகூடிய பூங்காவை போலீசார் இழுத்து மூடினர்.கொரோனா வைரஸ் உலக நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், மக்களை வெளியே வர வேண்டாம் எனவும், சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. ஆனாலும், சிலர் ஆபத்தை உணராமல் பொது வெளியில் கூட்டமாக கூடுவதும், சுற்றித்திரிவதையும் வழக்கமாக கொண்டு வருகின்றனர். எவ்வளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், சில நாடுகளில் மக்கள், அனைத்தையும் புறக்கணித்துவிட்டு, பார்க், பீச் என ஜாலியாக பொழுதை கழிக்கின்றனர்.gallerye_141613821_2515675

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும், மக்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும், வார இறுதி விடுமுறை நாட்களில் தெற்கு லண்டனில் உள்ள பிரோக்வெல் பூங்காவில் சுமார் 3 ஆயிரம் பேர் கூடினர்.இதனையறிந்த போலீஸ் அதிகாரிகள், அங்குள்ளவர்களை வெளியேற்றி, பூங்காவை மூடினர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,சமூக விலகலை பின்பற்றுமாறும், வீட்டில் தங்கியிருங்கள் எனவும் பிரதமர் அறிவுறுத்தியிருந்தும், அதனை புறக்கணித்து சிலர் பூங்காவில் கூடினர். இதனால், பூங்காவை மூடுவது குறித்த முடிவை எடுக்க வேண்டியிருந்தது. அரசின் தெளிவான வழிமுறைகளை மக்கள் பின்பற்றினால், இது நடக்கத் தேவையில்லை. பொதுமக்களின் பாதுகாப்புக்காக தான் நாங்கள் இதை செய்கிறோம் என தெரிவித்தனர்.(15)