செய்திகள்

டயானா 24 வருடங்களுக்கு முன்னர் தனியாக அமர்ந்த தாஜ்மஹால் பெஞ்சில் அமர்ந்து படம் எடுத்த விலியம்ஸ் கேட் தம்பதியர்

இந்தியாவுக்கு விஜயம் செய்த பிரித்தானிய இளவரசர் வில்லியம்ஸ் தனது மனைவி கேட்டுடன், 24 வருடங்களுக்கு முன்னர் தனது தாயார் இளவரசி டயானா இந்தியாவின் தாஜ் மஹாலுக்கு முன்பாக உள்ள பெஞ்சில் அமர்ந்து படம் எடுத்த அதே பென்சில் அமர்ந்து நேற்று சனிக்கிழமை படம் எடுத்தார்.

1992 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு விஜயம் செய்த டயானா தனியாக இந்த பெஞ்சில் அமர்ந்து படம் எடுத்தார். பின்னர் சிறிது காலத்தின் பின்னர் இளவரசர் சார்ள்ஸை அவர் விவாகரத்து செய்துவிட்டார். இந்த பெஞ்ச் டயானா பெஞ்ச் என்று தான் அதன் பின்னர் அழைக்கப்பட்டு வருகிறது.

பூட்டானுக்கு விஜயம் செய்த வில்லியம்ஸ் மற்றும் கேட் , இந்திய பிரதமர் மோடியுடன் இரு தினங்களுக்கு முன்னர் மதிய போசனம் உண்டதுடன் பல பகுதிகளையும் பார்வையிட்டனர். அவர்களின் விஜயத்தின் இறுதி நாளான நேற்று அவர்கள் தாஜ் மஹாலுக்கு விஜயம் செய்தனர்.

டயானாவை திருமணம் செய்த சார்ள்ஸ் தாஜ்மகாலுக்கு அவரை கூட்டிச் செல்வதாக கூறி இருந்தபோதிலும் அவர் அவ்வாறு செய்யவில்லை. ஆனால் நேற்றைய தினம் அவர்களின் மகன் வில்லியம்ஸ் தனது மனைவியை அங்கு கூட்டிச்சென்று டயானா தனியாக தாஜ்மகாலுக்கு விஜயம் செய்தபோது  பெஞ்சில் இருந்து படம் எடுத்தார்.

இந்தியாவில் தற்போது கடும் வெப்பநிலை ( 41 பாகை செயல்சியஸ்) நிலவுவதால், வில்லியம்ஸும் கேட்டும் இந்த பெஞ்சில் அமர்வதற்கு முன்னர் அந்த பெஞ்சை தண்ணீர் ஊற்றி அதன் வெப்பத்தை தணித்திருந்தார்கள்.

1 2 3 4 5 6