செய்திகள்

டாக்டரை மணக்கிறார் நடிகை தனன்யா

‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தனன்யா.

தனது முதல் படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் அவருக்கு மேலும் வாய்ப்பு எதுவும் அமையவில்லை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ‘அங்காடித் தெரு’ மகேஷ் ஹீரோவாக நடித்துள்ள ‘வெயிலோடு விளையாடு’ படத்தில் நாயகியாக நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்தப் படம் வெளியாகாமல் பெட்டிக்குள்ளே முடங்கிவிட்டது.

சினிமாவில் பெரிய வாய்ப்பு இல்லாததால் தனன்யா எம்.பி.பி.எஸ் படித்து மருத்துவரானார். இந்நிலையில் இவருக்கும், ஆந்திராவைச் சேர்ந்த நரம்பியல் துறை டாக்டர் விக்ரம் ஆர்யனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி, இவர்கள் திருமணம் வருகிற மே 1-ம் தேதி, ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடக்கிறது. தனன்யாவின் அம்மா, அப்பா இருவரும் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.