செய்திகள்

டிராவிட் ஆலோசகர் அணியில் இடம்பெற்றிருந்தால் அற்புதமாக இருந்திருக்கும்: கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசகர் குழுவில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான தெண்டுல்கர், கங்குலி, லஷ்மண் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆனால், டெஸ்ட் அணியில் இந்தியாவின் தடுப்புச் சுவர் என்று அழைக்கப்பட்ட டிராவிட் அதில் இடம் பெறவில்லை. இது எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. டிராவிட் இடம்பெறாமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் வீராட் கோலி கூறும்போது “இந்திய அணிக்கு ஆலோசனை வழங்கி சிறப்பாக செயல்பட உருவாக்கப்பட்டுள்ள ஆலோசகர் குழுவில் நான்கு ஜாம்பவான்களும் இருந்திருந்தால் அற்புதமாக இருந்திருக்கும். டிராவிட் கண்டிப்பாக சில பொறுப்புகள் மற்றும் கடமை உணர்ச்சிகளை செய்ய வேண்டும்.
நீங்கள் கிரிக்கெட் விளையாடுவதை விட இந்த ஜாம்பவான்களை கவனித்தாலே அதிக கிரிக்கெட் நுணுக்கங்களை பெறலாம். அவர்கள் நமக்கு பல்வேறு வழிகளில் உதவிகளாக இருப்பார்கள்” என்றார்.