செய்திகள்

டிவில்லியர்சின் மனைவியுடன் மேடையில் பாட்டுப்பாடி அசத்திய ஷேன் வாட்சன் – வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுடரான ஷேன் வாட்சன் போட்டிகளின் போது முக்கியமான நேரத்தில் களமிறங்கி அசத்துவார். அதே சமயம் அவ்வப்போது கிடைக்கும் மேடைகளிலும் அவர் கிட்டாரில் பாட்டுபாடி அசத்தி வருகிறார்.

கடந்த 2014-ம் ஆண்டு அபுதாபியில் நடந்த ஐ.பி.எல். தொடக்க விழாவில் ரசிகர்கள் முன்னிலையில் தோன்றிய அவர் மேடையில் பாட்டுப் பாடி அனைவரையும் கவர்ந்தார்.

இந்நிலையில் தற்போது நடந்து வரும் ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் அணியில் விளையாடி வரும் வாட்சன் மேடையில் நேற்று முன்தினம் பிரபல ஆங்கில பாடல் ஒன்றை பாடினார். அவருடன் டிவில்லியர்சின் மனைவி டேனியலும் இணைந்து கொண்டு அந்த பாடலைபாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்கள்.

இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள டிவில்லியர்ஸ், “குட்டி டிவில்லியர்ஸ் தனது அம்மாவின் மேடை பங்கேற்பை முதல்முறையாக பார்க்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=3X7GHETKFdE” width=”500″ height=”300″]