செய்திகள்

டி-20 போட்டிகளால் பாதிப்பு

இருபதிற்கு இருபது போட்டிகள் மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட்டை மோசமாக பாதித்துள்ளதாக கருத்து வெளியிட்டு முன்னாள் தலைவர் கிளைவ் லொயிட் தற்போதைய மேற்கிந்திய வீரர்கள் டெஸ்ட்போட்டிகளுக்கு அதிகளவு முக்கியத்துவத்தை வழங்குவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய அணி வீரர்கள் நன்றாக பணம்சம்பாதிக்கின்றனர்,டெஸ்ட் போட்டிகளை தவிர்த்துவிட்டு இருபதிற்கு இருபது போட்டிகளில் விளையாடலாம் என்ற சூழலும் அவர்களுக்குள்ளது.என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மேலும் வலிமைவாய்ந்ததாக மாறவேண்டும்,மூன்று நாடுகள் மாத்திரம் கிரிக்கெட் உலகை ஆள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.