செய்திகள்

டீ.வீ.உபுல் 10ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டார்

இன்று மாலை இரகசிய பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்ட தென் மாகாண சபை உறுப்பினர் டீ.வீ.உபுல் எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று இரவு கொழும்பு பிரதான நீதவான் ஹிகான் பிலபிட்டிய முன்னிலையில் அவர் ஆஜர் செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை வரும் 10 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 30ம் திகதி திஸ்ஸமஹாராம பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமரானதும் பொலிஸ் நிதி மோசடி பிரிவின் பொலிஸ் கான்டபில்கள் முதல் அதிகாரிகள் வரை கல்லால் அடித்துக்கொள்ளப்படுவர் என கருத்து வெளியிட்டிருந்த நிலையில் அது தொடர்பாக விசாரணை நடத்தவென இன்றைய தினம் கொழும்பிலுள்ள இரகசிய பொலிஸ் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்ததுடன் விசாரணையை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.