செய்திகள்

டுவிட்டரை அதிகளவிற்கு பயன்படுத்தும் ஐஎஸ் தீவிரவாதிகள்

ஐஎஸ் தீவிரவாதிகள் சமூக ஊடகங்களை பயன்படுத்தி தங்களது பிரச்சாரங்களை மேற்கொள்வதில் பாரிய வெற்றியடைந்து வருவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
புரூங்கிங் ஆய்வகம் மேற்கொண்டுள்ள ஆய்வொன்றின் மூலமே இது தெரியவந்துள்ளது.
உலகநாடுகளில் உள்ள ஐஎஸ் ஆதரவாளர்கள் 46000 ற்கும்மேற்பட்ட டுவிட்டர்கணக்குகளை ஆரம்பித்துள்ளதாகவும், இவற்றில் செப்டம்பர் மாதத்திற்கு பின்னர் 20000 ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
சாதராணமாக டுவிட்டரை பயன்படுத்துபவர்களை விடவும் இந்த அமைப்பின் ஆதரவாளர்கள் அதிகளவில் டுவிட்டர் செய்திகளை அனுப்புவதாகவும்,இவர்களை பின்தொடர்பவர்கள் பெருமளவானவர்கள் உள்ளதாகவும் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈராக் மற்றும் சிரியாவலிருந்தே அதிகளவிற்கு டுவிட்டர் செய்திகளை இந்த அமைப்பின் ஆதரவாளர்கள் வெளியிடுகின்றனர்.மேலும் சவுதிஅரேபியாவிலிருந்தும் பலர் ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவாக டுவிட்டர் செய்திகளை வெளியிடுகின்றனர்.
மேலும் இவர்களில் பெரும்பாலானவர்களின் டுவிட்டர் செய்திகள் அராபியமொழியிலேயே காணப்படுகின்ற அதேவேளை ஐந்தில் ஒரு வீதத்தினர் ஆங்கிலத்தையும்,6 வீதமானவர்கள் பிரெஞ்சினையும் பயன்படுத்துகின்றனர்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.