செய்திகள்

டெங்கு நுளம்பு பரவக்கூடியவாறு வீட்டுச்சூழலை வைத்திருந்த 4 பேர் மீது வழக்குத்தாக்கல்

அட்டன் ஹீஜீராபுர பகுதியில் டெங்கு நுளம்பு பரவக்கூடியவாறு தமது வீட்டுச்சூழலை வைத்திருந்த 4 பேர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பிரதேச பொது சுகாதார பரிசோதகர் எஸ்.விஜயவீர தெரிவித்தார்.

இப்பகுதியில், பொலிஸாரின் உதவியுடன் அட்டன் டிக்கோயா நகர சபை மற்றும் சுகாதார அதிகாரிகள் இன்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, டெங்கு நுளம்பு பெறுகும் வகையில் சூழலை வைத்திருந்த வீட்டு உரிமையாளர்கள் நான்கு பேர் மீது அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

50 வீடுகள் மீது சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கினிகத்தேனை பிரதேச பொது சுகாதார பரிசோதகர் எஸ்.விஜயவீர மேலும் தெரிவித்தார். குறித்த சுகாதார பரிசோதகர் எஸ்.விஜயவீர தலைமையிலான சுகாதார பரிசோதகர்கள் குழு சோதனை நடவடிக்கைகையை முன்னெடுத்திருந்தது.