செய்திகள்

டெல்லியில் ரயிலில் பயணம் செய்த மோடி (படங்கள்)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, தவுலா குவான் பகுதியில் இருந்து துவாரகாவிற்கு டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளார். இந்த பயணத்தின்போது, அவருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடன் சென்றுள்ளார்.

தனது மெட்ரோ ரயில் பயணம் பற்றி பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும் போது, ”மெட்ரோ ரயில் பயணம் மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. ஸ்ரீதரன் என்னை பலமுறை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும்படி கூறி இருக்கிறார். ஆனால், அந்த சந்தர்ப்பம் எனக்கு இப்போது தான் கிடைத்துள்ளது. டெல்லி மெட்ரோவுக்கும், மெட்ரோ திட்ட தலைவர் ஸ்ரீதரனுக்கும் எனது நன்றிகள்” என்று கூறி உள்ளார்.

1

2(1)