செய்திகள்

டெல்லி சட்டப் பேரவை கலைக்கப்படவுள்ளது: பெப்ரவரிக்கு முன் தேர்தல்

இந்தியாவில் சர்ச்சைக்குரியதாக இருந்துவந்த டெல்லி சட்டப்பேரவையைக் கலைத்து புதிதாக தேர்தலை நடத்துவதற்கு இந்திய மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதத்துக்கு முன்பாக டெல்லி சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, டெல்லி சட்டப் பேரவையை கலைக்க பரிந்துரைத்து துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்று, 70 நபர் கொண்ட டெல்லி சட்டப் பேரவையை கலைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இருப்பினும், இக்கூட்டத்தில் உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கவில்லை. அவர் வெளிநாடு சென்றுள்ளார்.

டெல்லி சட்டப் பேரவை கலைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பிப்ரவரி 2015-க்கு முன்னர் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் மறு தேர்தல் நடத்த ஆம் ஆத்மி கட்சி ஆரம்பம் முதலே வலியுறுத்தி வந்தது. பாஜக தேர்தலை எதிர்கொள்ள தயங்குவதாகவும் கேஜ்ரிவால் விமர்சித்து வந்தார்.

இந்நிலையில், அமைச்சரவை முடிவான உடனேயே டெல்லி பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

முன்னதாக, இன்று காலை, டெல்லி சட்டப் பேரவையை கலைக்க பரிந்துரைத்து குடியரசுத் தலைவருக்கு துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் அறிக்கை அனுப்பினார்.

டெல்லியில் மறுதேர்தல் நடத்த பாஜக உட்பட அனைத்துக் கட்சிகளும் விருப்பம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, டெல்லி சட்டப் பேரவையை கலைக்க பரிந்துரைத்து குடியரசுத் தலைவருக்கு துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் அறிக்கை அனுப்பினார்.

டெல்லியில் 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதல்வரான ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவால், 49 நாள் ஆட்சிக்குப் பிறகு, லோக்பால் மசோதாவை அமல்படுத்த முடியவில்லை எனக் கூறி ராஜினாமா செய்தார். அதன்பிறகு, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது

அங்கு சட்டப் பேரவையைக் கலைத்துவிட்டு மறு தேர்தல் நடத்தக் கோரி ஆம் ஆத்மி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கு விசாரணையின்போது, அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்பதாக துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் தெரிவித்திருந்தார்.

அதன்படி, பாஜக, காங்கிரஸ் தலைவர்களை அழைத்து துணை நிலை ஆளுநர் நேற்று ஆலோசனை நடத்தினார். பாஜக சார்பில் மாநில தலைவர் சதீஷ் உபாத்யா, துணை நிலை ஆளுநரை சந்தித்துப் பேசினார். அப்போது, டெல்லியில் மறு தேர்தல் நடத்த விரும்புவதாக பாஜக தரப் பில் தெரிவிக்கப்பட்டது. ஹரியாணா மற் றும் மகாராஷ்டிரா மாநில தேர்தலில் வெற்றி கிடைத்திருப்பதால் தேர்தலைச் சந்திக்க பாஜக முடிவு செய்துள்ளது.

காங்கிரஸ் தரப்பில் நஜீப் ஜங்கை சந்தித்த ஹாரூண் யூசூப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கேஜ்ரிவால் ராஜினாமா செய்த மறுநாளிலிருந்தே, மறுதேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். துணை நிலை ஆளுநரிடமும் அதையே கூறியுள்ளோம்” என்றார்.

அனைத்துக் கட்சிகளும் மறுதேர்தலுக்கு விருப்பம் தெரிவித்திருப்பதையடுத்து, டெல்லி சட்டப்பேரவையை கலைக்க பரிந்துரைத்து குடியரசுத் தலைவருக்கு துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் அறிக்கை அனுப்பினார்.