செய்திகள்

டெஸ்ட் அணியின் தலைவர் பதவியில் இருந்து விராட் கோலி திடீர் விலகல்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக அறிவித்துள்ளார்.

அதில் தனக்கு இதுவரை காலம் ஆதரவு வழங்கிய ரசிகர்களுக்கு நன்றியை அவர் கூறிக்கொண்டுள்ளதுடன், பிசிசிஐக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததை தொடர்ந்தே அவர் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

ஏற்கவே அவர், ஒரு நாள் மற்றும் ரி20 அணிகளின் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
-(3)