செய்திகள்

டொனிபிளயர், கடாபி கூட்டுசதி அம்பலமாகியது

முன்னாள் பிரிட்டிஸ் பிரதமர் டொனிபிளயர், லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபி அரசாங்கத்துடன் இணைந்து இரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டதை உறுதிசெய்யும் கடிதங்கள் சிலவற்றை லண்டனின் சட்டத்தரணிகள் சிலர் பகிரங்கப்படுத்தியுள்ளனர்.
பிரிட்டனில் தங்கியிருந்த கடாபிஅரசாங்க எதிர்ப்பாளர்கள் சிலரை அவர்களது குடும்பத்துடன் கடத்தி லிபியாவிற்கு கொண்டுசெல்ல டொனிபிளயர் அரசாங்கம் அனுமதிவழங்கியமையும், இரு நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர் மத்தியிலான ஒத்துழைப்பினை பாராட்டி பிளயர் கடாபிக்கு கடிதம் எழுதியமையும் தெரியவந்துள்ளது.
குறிப்பிட்ட கடிதம் 2007 இல் எழுதப்பட்டது எனவும், லிபியா புரட்சிக்கு பின்னர் சேகரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கடிதங்களில் ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளினதும் இரகசிய நடவடிக்கைகள் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நஷ்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்துள்ள சட்டத்தரணிகளே இந்த கடிதத்தை பகிரங்கப்படுத்தியுள்ளனர்.