செய்திகள்

டோக்கியோவில் நிலநடுக்கம்: மக்கள் அலறியடித்து ஓடினர்

ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதவாகியிருந்த இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகள், அலுவலகங்களில் இருந்து வெளியேறினர்.

நிலநடுக்கத்தை அடுத்து டோக்கியோ நகரில் உள்ள நரிதா சர்வதேச விமான நிலையத்தின் இரண்டு ஓடுதளங்களும் சிறிது நேரம் மூடப்பட்டு பாதிப்பு ஏதாவது ஏற்பட்டுள்ளதா என்று சோதிக்கப்பட்டது. பாதிப்பு ஏற்படாததால் ஓடுதளங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் பொருட் சேதமோ, உயிர் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை.