செய்திகள்

டோனியின் தவறான முடிவால் தகர்ந்து போன கோப்பை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டியில் தோற்றதற்கு அணித்தலைவர் டோனியின் தவறான முடிவே காரணம் என்ற விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

‘நாணய சுழற்சியில் வென்ற அவர் துடுப்பெடுத்தாட தீர்மானிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் களத்தடுப்பை தெரிவு செய்தார். டோனியின் இந்த முடிவு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொலைக்காட்சி வர்ணனையாளர்களாக பணியாற்றும் முன்னாள் வீரர்கள் பலர் இதுகுறித்து கேள்வி எழுப்பினர்.
துடுப்பாட்டத்திற்கு சாகமான இந்த ஆடுகளத்தில் முதலில் துடுப்பெடுத்தாடியிருந்தால் சென்னை அணி மிகப்பெரிய ஓட்டங்களை குவித்து இருக்கலாம். டோனியின் தவறான முடிவை மும்பை அணி சரியாக பயன்படுத்துக்கொண்டு ஓட்டங்களைகுவித்து வெற்றி பெற்றது.
மும்பை அணி ஓட்டங்களை பார்த்த பிறகே டோனி தனது முடிவு தவறாக அமைந்துவிட்டதே என்பதை உணர்ந்து இருப்பார். பெங்களூர் அணிக்கு எதிரான 2–வது தகுதி சுற்றில் ‘நாணயசுழற்சியில்வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். அந்த அணியை குறைந்த ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தி சென்னை வென்றது.
இதனால் மும்பை அணியை குறைந்த ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்து விடலாம் என்று டோனி கருதி இருக்கலாம். ஆனால் அந்த ஆடுகளம் (ராஞ்சி) பந்துவீச்சுக்கு ஏற்ற வகையில் இருந்தது. ஆனால் நேற்றைய ஆடுகளம் (கொல்கத்தா)துடுப்பாட்டத்திற்கு ஏற்ற வகையில் இருந்தது.
டோனியின் இந்த தவறான முடிவால் சென்னை அணியின் 3–வது ஐ.பி.எல். கோப்பை கனவு தகர்ந்து விட்டதாக கருதப்படுகிறது.