செய்திகள்

தகவல் அறியும் சட்டமூலம் அவசர சட்டமாக வராது: ரணில் உறுதி

19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்ற முன்னர் தகவல் அறியும் சட்டமூலத்தை அவசர சட்டமூலமாக உச்சநீதிமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எதிர்ப்புத் தெரிவித்ததால் தகவல் அறியும் சட்டத்தை அவசர சட்டமூலமாக கொண்டுவரப் போவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

19ஆவது திருத்தம் தொடர்பான விவாதம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் தகவல் அறியும் சட்டமூலம் குறித்து சபையில் சர்ச்சை ஏற்பட்டது. 19ஆவது திருத்தத்தின் ஒரு பிரிவான தக வல் அறியும் சட்டமூலத்தை அவசர சட்ட மூலமாக உச்சநீதிமன்றத்துக்கு சமர்ப்பிப்பதை எதிர்க்கட்சியினர் எதிர்த்தனர்.