செய்திகள்

தங்களது வேட்பாளர்களுக்கு பரிதாப ஓட்டாவது போடுங்கள் ! – சீமான்

கோவையில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தங்களது வேட்பாளர்களுக்கு பரிதாப ஓட்டாவது போடுங்கள் என்று அக்கட்சியின் தலைவர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை மாவட்டம், சூலூர், சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் இலவசங்களை அள்ளிக் கொடுத்து மக்களை கையேந்தும் நிலைக்கு கொண்டு வந்ததாக விமர்சித்தார்.

தொடர்ந்து ஆவேசத்துடன் பேசி வந்த சீமான், இறுதியில், திடீரென நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு பரிதாப ஓட்டாவது போடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.

N5