செய்திகள்

தங்களை எதிர்ப்பவர்களை கைது செய்யும் கொள்கையினையே தற்போதைய அரசாங்கம் கடைப்பிடிக்கின்றது: மஹிந்த

அரசாங்கத்தை எதிர்க்கும் சகல தரப்பினரையும் கைது செய்யும் முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹிக்கடுவை சீனிகம ஆலயத்தில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டிருந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தை எதிர்க்கும் சகல தரப்பினரையும் கைது செய்யும் செயற்பாடுகளே இடம்பெற்று வருகின்றன. இதன்படி எதிர்வரும் வாரத்தில் கடந்த அரசாங்கத்தில் இருந்த பிரபலமானவர்கள் பலரை கைது செய்யும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.