செய்திகள்

தடைகளை தகர்தெறிந்த கமல்ஹாசனின் பாபநாசம்

வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் சார்பாக சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் பியுஸ் மற்றும் ராஜ் குமார் தியேட்டர்ஸ்
பிரைவேட் லிமிடட் சார்பாக ராஜ்குமார் சேதுபதி தயாரிப்பில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் கவுதமி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் “பாபநாசம்”.

சில மாதங்களுக்கு முன்பு சதிஷ் பால் என்பவர், “பாபநாசம்” (த்ரிஷ்யம்) படத்தின் கதை தான் எழுதிய “ஒரு மழகாலத்” என்னும் நாவலில் உள்ள கதையை ஒற்றிருக்கிறது என்றும், த்ரிஷ்யம் படத்தின்தயாரிப்பாளர்கள் தனதுஅனுமதியில்லாமல்திரைப்படமாக்கிவிட்டதாகவும் எனவே பாபநாசம் படபிடிப்பை நிறுத்த கோரியும் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது எர்ணாகுலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, பாபநாசம்படப்பிடிப்பிற்க்கு இடைக்காலதடை பெற்றிருந்தார். அந்தமனுவின் மீது மேல்முறையீடுசெய்த தயாரிப்பாளர் தரப்பு,தற்காலிகமாக இடப்பட்ட தடையை நீக்கி படப்பிடிப்பைதொடர்ந்தனர்.

இந்நிலையில் எர்ணாகுலம்2வது கூடதல் நீதிமன்றஅமர்விர்க்கு வந்தஇவ்வழக்கில் இரு தரப்புவாதங்களையும் கேட்ட நீதிபதி இவ்வழக்கினை தள்ளுபடிசெய்து தயாரிப்பாளருக்குஆதரவான தீர்ப்பினைஅளித்துள்ளார்.

இதனால் பாபநாசம்படத்திற்கான தடைமுற்றிலுமாக நீங்கியுள்ளது.

பாபநாசம் படத்தின் இசைமற்றும் பட வெளீயீட்டு தேதிவிரைவில் அறிவிக்கப்படுமெனதயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.