செய்திகள்

தடையைத் தளர்த்துகின்றதா ஐரோப்பிய ஒன்றியம்? முக்கிய பேச்சுவார்த்தைகள் நாளை

இலங்கை கடலுணவுப் பொருட்கள் மீதான இறக்குமதித் தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்குகிறது என வெளியான ஊடகச் செய்திகளை, மீன்படி அமைச்சகம் மறுத்துள்ளது.

அந்தச் செய்தி அடிப்படையற்றது எனக் கூறும் அவர்களது செய்திக் குறிப்பு, இது தொடர்பிலான முடிவொன்றை எடுப்பதற்கான முக்கிய பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ளன எனவும் கூறுகிறது.

முன்னதாக இலங்கை மீன்பிடி அமைச்சரின் ஊடக இணைப்புச் செயலர் எம்.டி.வன்னிநாயக்க வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில், ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக் கடலுணவு இறக்குமதிக்கு விதித்திருந்தத் தடையை நீக்க முடிவு செய்துள்ளது எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மாதம் 21ஆம் தேதி முதல் அந்தத் தடை நீக்கம் நடைமுறைக்கு வரவுள்ளது எனவும் இன்று முன்னர் வெளியான அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனித உரிமை மீறல்கள், சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகள் ஆகியவற்றின் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் அந்தத் தடையை கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விதித்தது.

ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த இந்தத் தடை காரணமாக இலங்கை அரசும், மீனவர்களும் பலவிதமான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்தனர்.
R-06