செய்திகள்

தந்தை செல்வாவின் 118 ஆவது பிறந்த தினம் இன்று

தந்தை எஸ்.ஜே.வி செல்வநாயகத்தின் 118 ஆவது பிறந்த தினம் இன்று வட மாகாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ் மக்களின் தந்தை என அறியப்படும் எஸ். ஜே.வி .செல்வநாயகத்தின் 118 ஆவது பிறந்த தினம் இன்றைய தினம் யாழ் மாவட்டத்திலும் நினைவுகூரப்பட்டது.

யாழ் நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு சமாதிக்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்னாள் பேராயர் ஜெபநேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

n10