செய்திகள்

தனது காணியை வழங்கக் கோரி முதியவர் மரத்தின் மீதேறி ஆர்ப்பாட்டம்

தனது காணியை தன்னிடம் ஒப்படைக்க கோரி வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தின் கூரையில் ஏறி முதியவர் ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேவத்தெக விக்கிரமசூரிய தெரிவிக்கையில் –

வவுனியா, நெடுக்குளம், மினிமறிச்சகுளம் பகுதியில் எனது தந்தைக்கு ஒரு ஏக்கர் வயல்காணி இருக்கிறது. அந்த காணி அவருக்கு பின் எனக்கு என உறுதியில் எழுதப்பட்டுள்ளது. எனது அக் காணிக்குரிய ஆவணங்கள் என்னிடம் உள்ள போதும் அதனை வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தினர் வேறு ஒருவருக்கு வழங்கியுள்ளனர். எனவே எனது காணியை மீட்டுத் தருமாறே இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

IMG_20150623_231425 copy