செய்திகள்

தனது கைதை தடை செய்யக் கோரி கோதாபய தாக்கல் செய்த மனு இன்று நீதி மன்றத்தில் ஆராயப்படவுள்ளது

தன்னை கைது செய்யும் திட்டத்துக்கு தடை விதிக்குமாறு கோரி  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவினால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனு இன்று மூவரடங்கிய நீதியரசர் குழம் முன்னிலையில் ஆராயப்படப்படவுள்ளது.
தன்னை கைது செய்வதற்கான  முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும்  கைதுசெய்யப்படுமளவுக்கு தான் குற்றம் செய்யவில்லையெனவும் இதனால் அதற்கு தடை விதிக்குமாறும் கோரி கோதாபய ராஜபக்‌ஷ தனது சட்டத்தரணியூடாக கடந்த திங்கட் கிழமை உயர் நிதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இதன்படி அந்த மனு இன்று ஆராயப்படவுள்ளது.