செய்திகள்

தனது தந்தை மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என்கிறார் நாமல்

தனது தந்தை மீண்டும் அரசியலக்கு வர வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மகன் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அவர் தனது பேஸ்புக் பக்கத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் தனது தந்தையுடனேயே இருப்பதாகவும் அவர் மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பெனவும் இதன்படி அவர் அரசியலுக்கு வர வேண்டும் எனவும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.