செய்திகள்

தனது யாழ் விஜயத்தை “துன்பப்பட்டவர்களின் கண்களின் இருந்து கண்ணீரை துடைப்பதற்கானது” என்று விபரித்த மோடி (படங்கள் )

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது விஜயத்தின் நிறைவில் செய்த ‘டுவிட்டர்’ பதிவில் தனது விஜயம் குறித்து மகிழ்ச்சி வெளியிட்டதுடன் அந்த விஜயம் ” துன்பப்பட்டவர்களின் கண்களின் இருந்து கண்ணீரை துடைப்பதற்கானது ” என்று குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் இந்தியாவினால் கட்டப்படும் கலாசார நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர், இலங்கை முன்னேற வேண்டும் என்றும் ஐக்கியம், அமைதி மற்றும் நல்லுறவு ஆகியவை சகல பிரஜைகளும் மதிக்கப்படும் வகையிலான ஒரு சமத்துவமான அபிவிருத்திக்கு அவசியமானவை என்றும் கூறினார்.

இளவாலையில் இந்திய அரசாங்கத்தின் வீடமைப்பு திட்டத்தினை அங்குரார்ப்பணம் செய்து வைத்த மோடி , தமிழர்களின் கலாசார பாரம்பரிய முறைப்படிவீடு குடிபூரலுக்கான பால் பொங்க வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதுடன் பயனாளிகளுக்கான வீட்டு உறுதிப்பத்திரங்களையும் வழங்கினார்.

முன்னதாக நாதஸ்வர இசையுடன் பெண்கள் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றிருந்தனர்.

பின்னர் கீரிமலை நகுலேஸ்வரம் கோவிலுக்கு சென்று வழிபாட்டில் கலந்து கொண்ட மோடி தான் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக உணர்வதாக பின்னர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டார்.

 Modi and CVW Paal 2 Paal 3 Pongal

Naguleswaram Temple 1 Temple 2 Temple 3