செய்திகள்

தனித்தனி ஊடக சந்திப்புக்களை நிறுத்துங்கள் : ஶ்ரீ.ல.சு.கவினருக்கு சுசில் கோரிக்கை

வெவ்வேறு இடங்களில் ஊடக சந்திப்புகளை நடத்தாது கட்சித் தலைமையகதிற்கு வந்து ஊடக சந்திப்புக்களை நடத்துமாறு ஶ்ரீ லங்கா கட்சியினரை கேட்டுக்கொள்வதாக அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்கள் வெவ்வேறு பிரிவினராக ஒவ்வொரு இடங்களில் ஊடக சந்திப்புகளை நடத்திவரும் நிலையிலேயே சுசில் பிரேம ஜயந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எமது கட்சி ஜனநாயகத்தை பேனும் கட்சி. இங்கு யாரும் தமது நிலைப்பாடுகளை முன்வைக்கலாம் அதற்காக வெவ்வேறு பிரிவினராக ஒவ்வொரு இடங்களில் ஊடக சந்திப்புக்களை நடத்துவதை நிறுத்துங்கள். எப்போது வேண்டுமென்றாலும் கட்சித் தலைமையகத்திற்கு வந்து உங்கள் நிலைப்பாடுகளையும் கருத்துக்களையும் முன்வையுங்கள்.
ஒவ்வொரு புதன் கிழமையும் இங்கு ஊடக சந்திப்பு நடக்கும்  அதில் நீங்களும் வந்து கலந்துக்கொள்ளுங்கள் என கட்சியினரை கேட்டுக்கொள்கின்றேன்.