செய்திகள்

தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து வீடு சென்றவர்களை 14 நாட்கள் வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு அறிவித்தல்

14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை பூர்த்தி செய்து தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலிருந்து வீடுகளுக்கு சென்ற மற்றும் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டவர்கள் மீண்டும் 14 நாட்களுக்கு தமது வீடுகளிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை பூர்த்தி செய்து வீடு சென்ற காலி கராப்பிட்டியவை சேர்ந்த ஒருவருக்கு வீடுக்கு சென்று 7 நாட்களின் பின்னர் கொரேனா வைரஸ் தொற்றிய சம்பவம் பதிவாகியுள்ளது.
இதனை அடிப்படையாக கொண்டே இராணுவ தளபதி இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
இதன்படி தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து வீடுகளுக்கு சென்றவர்களை மேலும் 14 நாட்களுக்கு தமது வீடுகளிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் இந்த அறிவித்தலுக்கு அனைவரும் மதிப்பளிக்குமாறும் இராணுவ தளபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
-(3)