செய்திகள்

தனியார் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கடினமான விடயம்

புதிய மைத்திரி அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட தனியார் ஊழியர்களுக்கான 2500 ரூபாவை வழங்குவது கடினமான விடயம் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தனியார் ஊழியர்களுக்கான சமபளத்தை வழங்குவதற்கு அரசு பரிந்துரைக்க மட்டுமே முடியும். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் மக்கள் அதுதொடர்பாக அரசிடமே முறைப்பாடு செய்கிறனர்.

இந்த விவகாரம் அரசுக்கும் கடினமானது. தனியார் நிறுவனங்களுடன் பேசி முடிவெடுக்கலாம். என அவர் தெரிவித்தார்.