செய்திகள்

தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசித்த பார்வையற்ற சிறுவன்

கோவையில் இருந்து ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சியில் பார்வையற்ற சிறுவன் பிரெய்லி முறையில் வெள்ளிக்கிழமை செய்தி வாசித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், பழநியை அடுத்த பாறைப்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசுவின் மகன் ஸ்ரீ ராமானுஜம் (10).

இவர் தொண்டாமுத்தூரில் உள்ள பார்வையற்றோர் தொடக்கப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இவருக்கு தொலைக்காட்சியில் செய்தி வாசிக்க வேண்டும் என்பது வெகுநாள் ஆசை.

மேலும், செய்தி வாசிப்பு தொடர்பாக ஸ்ரீ ராமானுஜத்துக்கு, அவர் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஒரு தனியார் தொலைக்காட்சி ஊழியர்கள் சேர்ந்து கடந்த 4 மாதங்களாக செய்தி வாசிப்பது தொடர்பாக பயிற்சியளித்து வந்தனர்.

இந்நிலையில், மே தினத்தையொட்டி ஸ்ரீ ராமானுஜம் தனியார் தொலைக்காட்சியில் பிரெய்லி முறையில் செய்தி வாசித்தார்.டி.வியில் செய்தி வாசித்த பார்வையற்ற சிறுவனுக்கு உலகம் முழுக்க இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.