செய்திகள்

தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் குதிப்பு

இன்று தனியார் பஸ் ஊழியர்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள சீருடையை அணிய முடியாது எனத் தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொழும்பு மற்றும் கண்டியில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் அனைத்து தனியார் பஸ் ஊழியர்களும் இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தனியார் பஸ் ஊழியர்களுக்கு சீருடைய அணிய வேண்டியது இன்று தொடக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பஸ்கள் சேவையில் இருந்து விலகி உள்ளபோதும் பயணிகளுக்கு தடையின்றி செயற்பட இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் திட்டப் பணிப்பாளர் எச்.டபிள்யு. விப்புலசேன் தெரிவித்துள்ளார்.