செய்திகள்

தனியார் வைத்தியசாலை பரிசோதனைகளுக்கு நிர்ணய விலை அறிவிப்பு

தனியார் வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் பரிசோதனைகளுக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய தனியார் வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் 33 மருத்துவ பரிசோதகைளுக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்மானம் தனியார் வைத்தியசாலைகளுக்கான கட்டுப்பாட்டுச் சபையால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நோயாளர் ஒருவரை குறைந்தது பத்து நிமிடங்களாவது சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனூடாக தனியார் வைத்தியசாலைகளினூடதக நோயாளர்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய அதிகபட்ச நன்மைகளை பெற்றுக் கொடுப்பதே நோக்கம் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால சுட்டிக்காட்டியுள்ளார்.

n10