செய்திகள்

தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்

கோலிவுட், பாலிவுட் தற்போது ஹாலிவுட் வரை சென்று விட்டார்தனுஷ். இந்நிலையில் இவர் நடிப்பில் 4 வருடத்திற்கு முன் இதே நாளில் வெளிவந்த படம் 3.

இப்படத்தை இவருடைய மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்க, தனுஷிற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். ரஜினி மகள், கமல் மகள் என படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.

அதைவிட இப்படத்தில் தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார், இவர் இசையமைத்த ‘கொலைவெறி’ பாடல் உலக பேமஸ் ஆனது அனைவரும் அறிந்ததே. மேலும், ஸ்பெஷலாக இன்று தமிழ் சினிமாவையே கலக்கி வரும் சிவகார்த்திகேயன் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், தனுஷ் திரைப்பயணத்தில் இப்படம் தவிர்க்கமுடியாதவை தான். அந்த அளவிற்கு தனுஷின் நடிப்பி அனைவரையும் கவர்ந்தது. மேலும், இப்படத்தில் நெகட்டிவ் கிளைமேக்ஸ் வேண்டாம் என ரஜினிகாந்த் கூறியும் ஐஸ்வர்யா தனுஷ் ஒரு இயக்குனராக தன் முடிவில் இருந்து மாறவே இல்லையாம்.

3 வெளிவந்து 4 வருடம் ஆகிய நிலையில் ரசிகர்கள் டுவிட்டரில்#4yearsofMoonu என்ற டாக் கிரியேட் செய்து ட்ரண்ட் செய்து வருகின்றனர்.

N5