செய்திகள்

” தன்னிடம் தூசனம் கேட்டுக்கொள்ள வேண்டாம் ” : சுசில் ஊடகவியலாளர்களுக்கு தெரிவிப்பு

தன்னிடம் தூசனம் கேட்டுக்கொள்ள வேண்டாம் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் வேட்பு மனு வழங்குவது தொடர்பாக நேற்று நடைபெற்ற கட்சி பிரதிநிதிகளின் கூட்டத்தில் நடந்தது என்ன என இன்று ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்திற்கு சென்றிருந்த சுசில்பிரேம ஜயந்தவிடம் ஊடகவியராளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

” என்னிடமிருந்து தூசனம்  கேட்டுக்கொள்ள வேண்டாம். அது தனிப்பட்ட கூட்டம் அங்கு நடந்தை கூற வேண்டிய அவசியம் கிடையாது. நாம் ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்துகின்றோம். அறிக்கைகளை வெளியிடுகின்றோம் அவை போதுமானது ”. என தெரிவித்து அவ்விடத்திலிருந்து கோபத்துடன் அகன்று சென்றார்.